திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதுக்காமூர் மகாவீரர் ஜினாலயத்தில் உலக மக்கள் நன்மை வேண்டி, மகா மண்டல விதான பூஜை, கடந்த, 20ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கி கூறப்பட்டது. இதை முன்னிட்டு, தினமும், மகாவீரர் சுவாமிக்கு, சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. நிறைவு நாளான, நேற்றுமுன்தினம், சுவாமி வீதி உலா நடந்தது.