பதிவு செய்த நாள்
28
ஜன
2012
11:01
சேலம்: சேலம் அடுத்த நரசோதிப்பட்டி மகா காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா, நாளை நடக்கிறது.கடந்த 23ம் தேதி, முகூர்த்தகால் நடுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, இன்று கணபதி பூஜை, ஸங்கல்பம், கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், குபேர ஹோமம், பூர்ணாஹூதி நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.காலை 11 மணியளவில், தீர்த்தக்குடம், பாலிகை ஊர்வலகமாக எடுத்து வரப்பட்டு கோவிலை வந்தடைகிறது. பின், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், ரக்ஹாபந்தனமும், மாலை 6.30 மணிக்கு முதல்கால யாக பூஜை நடக்கிறது. நாளை காலை 5 மணிக்கு இரண்டாம் காலயாக வேள்வி, லட்சுமி ஹோமம், நாடிசந்தானம், மஹா பூர்ணாஹூதியும், காலை 6.30 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.காலை 7.20 மணியளவில், மகாகாளியம்மன் கோவில் கோபுர கலச கும்பாபிஷேகமும், 9 மணிக்கு மஹா அபிஷேகமும் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. காலை 10 மணியளவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை, கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.