பதிவு செய்த நாள்
02
ஆக
2018
11:08
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டினம் முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா நடந்தது. விழா ஜூலை 22 ல் துவங்கியது. அன்று காலை மேள தாளத்துடன் முத்துப்பெறுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழா நாட்களில் தர்ம தாவள விநாயகருக்கும், அம்மனுக்கு விசேஷ அபிஷேகம் தீபாராதனை நடந்தது. தினமும் துர்க்கா, ஆண்டாள், முத்துமாரி, தேவி காயத்திரி, தனலட்சுமி, சரஸ்வதி, காமாட்சி சகஸ்ரநாமம் நடந்தது. அம்மன் வெண்மை, சிவப்பு, சித்திர நிறம், ரோஜா, மஞ்சள், இளஞ்சிவப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று (ஆகஸ்ட் 1)ல் காலை 5:00 மணிக்கு ஊர்ப் பொங்கல் நிகழ்ச்சியும், 11:00 மணிக்கு குழந்தைகள் கலை நிகழ்ச்சியும், மாலை 3:30 மணிக்கு மகளிர் கும்மி, கோலாட்டமும் நடந்தன. மாலை 4:40 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் துவங்கியது. 6:00 மணிக்கு கங்கையில் சேர்த்தல், மாலை 6:30 சாந்த அபிஷேகம், மங்கள தீபாரதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆயிர வைசிய மகாஜன சபையினர் செய்திருந்தனர்.