இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி வெள்ளி விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2018 11:08
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிக்கடைசி வெள்ளி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது .இக்கோயிலில் தை மற்றும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமைகளில் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். தென் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள். ஆடி வெள்ளி திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று காலை 10:30 மணிக்கு நடந்தது. பட்டர்கள் கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து கொடியேற்றினர். கோயில் பரம்பரை அறங்காவலர்கள், செயல்அலுவலர், இருக்கன்குடி, நென்மேனி, நத்தத்துபட்டி, கே.மேட்டுப்பட்டி, கிராம பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிேஷகங்கள் நடைபெறும். கடைசி வெள்ளிவிழா ஆகஸ்ட் 10ல் நடைபெறுகிறது. அன்றைய தினம் மதியம் 1:30 மணிக்கு அம்மன் ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பரம்பரை அறங்காவலர்கள் செய்துவருகின்றனர்.