அருப்புக்கோட்டை: இன்றைய கால கட்டத்தில் கோயில்களை நாடிச் செல்வோர் அதிகமாகி வருகின்றனர். மன நிம்மதி, பிரச்னைகள் தீர தங்களுக்கு பிடித்த கோயிலுக்கு சென்று தெய் வங்களை வழிபாடு செய்து கடவுளிடம் தங்கள் மன பாரங்களை இறக்கி வைக்கின்றனர். மனது லேசாக பக்தி ஒன்று தான் வழி.
அந்த வகையில் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் தெப்பம் அருகில் அரசமரத்து பிள்ளையார் உள்ளார். கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இருப்பதாக வரலாறு கூறுகிறது.
இயற்கையாகவே வந்த அரச மற்றும் வேம்பு மரம் ஒன்றாக சேர்ந்து வளர்ந்த மரத்தின் கீழ் இந்த பிள்ளையார் உள்ளார்.
புதன் கிழமை அன்று பிள்ளையாரை தரிசனம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். புதனன்று பெண்கள் கூட்டம் அலை மோதுகிறது. அவர்களாகவே சுவாமிக்கு பூஜை மற்றும் அபிஷேகங்கள் செய்து வழிபடுகின்றனர்.
இங்கு வந்து வழிபட்டால் திருமண பிராப்தம், மன நிம்மதி, குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் நிவர்த்தியாகும்.