விழுப்புரம்: விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில், உலக நன்மைக்காக 1008 குத்துவிளக்கு பூஜை நடந்தது. விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில், 1008 குத்துவிளக்கு பூஜை நடந்தது. ஆடி மாத மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 குத்துவிளக்கு ஏற்றி பெண்கள் பிரார்த்தனை செய்தனர். பூஜையை கோவில் சிவாச்சாரியார் வைத்தியநாதன் நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை, பிரதோஷ பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.