Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ­விருத்­தா­ச­லம் கோவி­லில் ஆடி ... கைலாசநாதர் கோவிலில் 1008 குத்துவிளக்கு பூஜை கைலாசநாதர் கோவிலில் 1008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
எழுத்தின் அளவு:
மயிலம் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா

பதிவு செய்த நாள்

06 ஆக
2018
01:08

மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் நடந்த ஆடி கிருத்திகை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி திருக்கோவில் ஆடிக் கிருத்திகை விழா நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு வழிபாடுகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு பால் உள்ளிட்ட நறுமணப்பொருட்களினால் அபிஷேகம் நடந்தது. கோவில் கோபுர வாசல் எதிரில் ஏராளமானவர்கள் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்தனர். பக்தர்கள் தேரடிவீதி மற்றும் நெல்லி, புளியந்தோப்பு போன்ற பல இடங்களில் அன்னதானம் வழங்கினர். பெண்கள், குழந்தைகள் என பலரும் அலகுகள் குத்திக் கொண்டும், கோவில் வளாகத்தில் அங்கபிரதட்சனம் செய்தும் நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு வெள்ளித்தேரில் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பரமணியர் சுவாமி மலை வலம் வந்தனர். இரவு 9:00 மணிக்கு உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கிரிவலத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் சிறப்பாக செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar