பதிவு செய்த நாள்
11
ஆக
2018
03:08
மோகனூர்: ராஜநாகலட்சுமி அம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு நடந்த வளைகாப்பு திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மோகனூர் அடுத்த ராசிபாளையம் மாருதிநகரில், பிரசித்தி பெற்ற ராஜநாகலட்சுமி அம்மன், சங்கபால நாகராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், ஆடி வெள்ளியில், வளைகாப்பு திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, நேற்று கொண்டாடப்பட்டது. அதிகாலை, 5:00 மணிக்கு, கணபதி ?ஹாமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. காலை, 8:00 மணிக்கு, அபி ?ஷகம், 9:00 மணிக்கு, கோ, சுமங்கலி, கன்னிகா பூஜை, 10:00 மணிக்கு சீர்வரிசை, 11:00 மணிக்கு, வளைகாப்பு பெருவிழா நடந்தது. விழாவில், 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு, வளைகாப்பு, பகல், 12:00 மணிக்கு, தீபாராதனை நடந்தது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.
* எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி அடுத்த, மணலி ஜேடர்பாளையத்தில் உள்ள, கருணாம்பிகை தாயார் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.