பதிவு செய்த நாள்
11
ஆக
2018
03:08
ஆத்தூர்: ஆடி நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. சேலம் மாவட்டம், ஆத்தூர், பெரியமாரியம்மன் கோவிலில், சிறப்பு அபி ?ஷகம், பூஜை நடந்தது. புஷ்ப அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார். அதேபோல், கைலாசநாதர் கோவிலில் உள்ள காமாட்சி அம்மன், வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். கோட்டை, சம்போடை வனம், மதுரகாளியம்மன், காயநிர்மலேஸ்வரர், வெள்ளை விநாயகர், வடசென்னிமலை பாலசுப்ரமணியர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.
* ஏத்தாப்பூர் வசிஷ்ட நதிக்கரையிலுள்ள, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், சிறப்பு பூஜைக்கு பின், அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெத்தநாயக்கன்பாளையம், லட்சுமி நரசிம்மர் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. அதேபோல், வாழப்பாடி வட பத்திரகாளியம்மன், திரவுபதியம்மன், செல்லியம்மன், புதுப்பட்டி மாரியம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.
* சங்ககிரி, சந்தைப்பேட்டை செல்லியாண்டியம்மன், வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோவில்களில், மக்கள் நலன் பெற வேண்டி, திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. 500க்கும் மேற்பட்ட பெண்கள், குத்து விளக்கேற்றி, பச்சை வாழை இலையில், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் வைத்து, சுவாமியை தரிசித்து, தாலிக் கயிறுக்கு பொட்டுவைத்து வழிபட்டனர்.
* ஆன்மிக நற்பணி குழு சார்பில், ஓமலூர், கோட்டை மாரியம்மன் கோவிலில், 13ம் ஆண்டாக, அஷ்டமஹாலட்சுமி ?ஹாமம் நடந்தது. தொடர்ந்து, 1,008 திருவிளக்கு மாங்கல்ய பூஜை நடந்தது. அதில், உற்சவர் அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.