பெரும்பேர் கண்டிகை, பெரும்பேர் கண்டிகை எல்லையம்மன் கோவிலில் ஆடித் திருவிழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பெரும்பேர் கண்டிகை, கோவில்களின் ஊர் என, புகழப்படுகிறது. சிறிய கிராமமான இங்கு ஏராளமான கோவில்கள் காணப்படுகின்றன. இங்குள்ள எல்லையம்மன் கோவில் தமிழகம் முழுவதுமுள்ள பலருக்கு, குல தெய்வக் கோவிலாக உள்ளது. இக்கோவிலில் நேற்று, ஆடி, 4ம் வெள்ளி திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. காலை குளக்கரையிலிருந்து அம்மனை கோவிலுக்கு கரகத்துடன் எடுத்து வந்தனர். பின், அக்னிப் பிரவேசம் சிறப்பாக நடந்தது. இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனைத் தரிசித்தனர்.