பதிவு செய்த நாள்
11
ஆக
2018
03:08
ஆர்.கே.பேட்டை, காமாட்சியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய சேஷ வாகனம், நேற்று, 1,008 பால்குடங்களுடன், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது காமாட்சியம்மன் கோவில். ஆடி மாதம் நான்காம் வெள்ளிக்கிழமையை ஒட்டி, கோவிலுக்கு புதிதாக அர்ப்பணிக்கப்பட்ட புதிய சேஷ வாகனம் உலா வந்தது. காலை, 10:00 மணிக்கு கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில், 1,000க்கும் மேற்பட்ட பெண்கள், பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர். மாலை, 6:00 மணிக்கு, கோவில் முன் மண்டபத்தில், உற்சவர் காமாட்சியம்மன் எழுந்தருளினார். அந்த வளாகத்தில், பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர்.