விழுப்புரம்: விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில், நந்திக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. விழுப்புரம் பழைய பஸ் நிலையம் பின்புறம் உள்ள, வாலாம்பிகை உடனுறை ஆதிவாலீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு நடந்தது. விழாவையொட்டி, மாலை 3:30 மணிக்கு வாலாம்பிகை மற்றும் ஆதிவாலீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு நந்திக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு வாலாம்பிகை உடனுறை ஆதிவாலீஸ்வரர் உற்சவர் சுவாமி கோவிலில் வலம் வந்து அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.