பிரார்த்தனையின் போது இந்த ஜெபத்தை ஜெபிப்போமா. “தேவனாகிய நீர் அன்பாயிருக்கிறது போல நாங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்று எங்களுக்கு தெளிவாய் போதித்திருக்கிறீரே! நாங்கள் அதைக் கற்றிருக்கிறோம். பிறருக்கு கற்பிக்கவும் செய்கிறோம். ஆனால் உம்முடைய மக்கள் என்று அழைக்கப்படும் எங்களுக்குள்ளே அன்புக்கு பதிலாக பகையும், பிரிவினையும், பிடிவாதமும், பொறாமையும், எரிச்சலும் தானே குடிகொள்கின்றன. எங்கள் கல் உள்ளங்களை உடைத்து நொறுக்கி உமது எல்லையற்ற கிருபையால் நிறைத்தருள வேண்டுமென்று வேண்டுகிறோம்”. இதை பின்பற்றி நாமும் அன்பின் பாதையில் நடப்போம். நேர்மைவழி நடப்போம்.