வில்லியனுார்: கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழாவை, முதல்வர் நாராயணசாமி வடம் பிடித்து துவக்கி வைத்தார். வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12நாட்கள் நடைபெற்று வரும் விழாவில், காலையில் சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி மாட வீதியுலா நடைபெற்றது.
முக்கிய விழாவான தேர்த்திருவிழாவில், நேற்றுகாலை 8:00 மணியளவில்,முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகி யோர் தேரோட்டத்தை வடம்பிடித்து துவக்கி வைத்தனர். இந்து அறநிலைத் துறை ஆணையர் தில்லைவேல் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். வில்லியனுார் நான்கு மாட வீதி வழியாக, தேர் சென்றது. வில்லியனுார் சங்கர்ஸ் வித்யாலயாபள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் திரளான பக்தர்களும்தேரை வடம் பிடித்தனர். காலை 10:00 மணியளவில் தேர் மீண்டும் தன் நிலையை அடைந்தது. இன்று (13ம்தேதி)இரவு 7 மணிக்கு தெப்பல் உற்ச்சவமும், நாளை விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் தலைமையில் உற்சவதார்கள் மற்றும் பொதுமக்கள்செய்து வருகின்றனர்.