ஆர்.கே.பேட்டை:ஆடி அமாவாசையை ஒட்டி, வெள்ளாத்துார் அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துாரில் அமைந்துள்ளது வெள்ளாத்துார் அம்மன் கோவில். ஓராண்டாக, அமாவாசை உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. சிறப்பு மிக்க, ஆடி அமாவாசையையொட்டி, நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. வெண்ணெய் காப்புடன், காய், கனிஅலங் காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். மாலை, 6:00 மணிக்கு, கோவில் முன் மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. பல கிராம மக்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.