கீழக்கரை: ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூட்டிற்கான மவுலீது எனும் புகழ்மாலை ஜூலை 14 அன்று மாலை 6:30 மணிக்கு தொடங்கியது. ஆக., 5 நள்ளிரவு மவுலீது ஓதப்பட்டது, மறுநாள் அதிகாலை அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தேர் கொண்டு வரப்பட்டது. பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை போர்த்தப்பட்டது.நேற்று மாலை 5:00 மணியளவில் யாஷஹீது, முராது ஹாஸில் என்ற கோஷம் முழங்க கொடிக்கம்பத்தில் இருந்து ஷரீப் ஓதி தமாம் செய்து கொடியிறக்கம் செய்யப்பட்டது.