பதிவு செய்த நாள்
19
ஆக
2018
12:08
ஆத்தூர்: திரவுபதி அம்மன் கோவில் தேர்த்திருவிழா, தீமிதி விழா நடந்தது. ஆத்தூர் அருகே, மல்லியக்கரையில், திரவுபதி அம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு, ஆறு ஆண்டுகளுக்கு பின், கடந்த, 10ல், அர்ஜூனன், திரவுபதி அம்மன், திருக்கல்யாணத்துடன், திருவிழா தொடங்கியது. நேற்று, திரவுபதி அம்மன், மாரியம்மன், நான்கு சிறு தேர்கள் என, ஆறு தேர்களை, பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்தனர். மாலை, தீமிதி விழா நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.