பதிவு செய்த நாள்
19
ஆக
2018
01:08
நாமக்கல்: நாமக்கல் - பரமத்தி சாலை, தொட்டிப்பட்டியில் சாய் தபோவனம் அமைந்துள்ளது. இங்கு, நாளை நான்காமாண்டு வருஷாபிஷேக விழா நடக்கிறது. அதிகாலை, 4:00 மணிக்கு, ஆரத்தி; 5:00 மணிக்கு, ஹோமம்; 6:00 மணிக்கு, கோபுர கலச அபிஷேகம் மற்றும் மங்கள ஸ்நானம் நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு, சர்வ சித்த தனாஹர்சன சங்கல்பம்; 10:00 மணிக்கு, நாமக்கல் விஜயலட்சுமி வெங்கடேஷ் குழுவினரின் பஜனை நடைபெறுகிறது. பகல், 12:00 மணிக்கு, ஆரத்தி; மாலை, 5:00 மணிக்கு, மாலை ஆரத்தி; இரவு, 7:00 மணிக்கு, இரவு ஆரத்தி; நாள் முழுவதும் சாய் சத்சரிதம் பாராயணம் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஷீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தினர் செய்துள்ளனர்.