புதுச்சேரி: புதுச்சேரி எல்லையம்மன் கோவில் பிரமோற்சவ விழா, 25ம் தேதி வரை நடக்கிறது. புதுச்சேரி எல்லையம்மன்கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை இந்திர விமானத்தில் சுவாமிகள் புறப்பாடு நடந்தது. 16ம் தேதி இரண்டாம் நாள் திருவிழாவும், 17ம் தேதி மூன்றாம் நாள் திருவிழாவும் நடந்தது. கடந்த 18ம் தேதி காலை 5.00 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் விசாக நட்சத்திரத்தில், புதிதாக எல்லையம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் அரச மரத்துக்கு திருமணம் நடந்தது. 9 நாட்கள் நடைபெறும் இக்கோவில் பிரமோற்சவ விழா வரும் 25ம் தேதிவரை நடைபெறுகிறது. ஆவணி மாதம் 18ம் தேதி (செப்.3ம் தேதி) காலை 11.30 மணிக்கு கூழ் வார்த்தலும், இரவு 7.00 மணிக்கு கும்பம் படைத்தலும் நடக்கிறது.