சாரைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் பால் – 600 மி.லி. முந்திரிப்பருப்பு – 30 திராட்சை – 20 சர்க்கரை – 6 டேபிள் ஸ்பூன் குங்குமப் பூ – சிறிதளவு ஜாதிக்காய் – 4 மிளகு அளவு
எப்படி செய்வது: முந்திரிப்பருப்பு, சாரைப்பருப்பு, இரண்டையும் வெண்ணெய் போல் மசிய அரைத்து, 400 மி.லி. பாலுடன் கலந்து களிம்பேறாத பாத்திரத்தில் இட்டு மிதமான சூட்டில் வைக்கவும். ஜாதிக்காயை பொடி செய்யவும். பால் கொதித்து சற்று கெட்டியான பின், மீதி பால் சர்க்கரை இரண்டையும் பாயாசத்தில் சேர்த்து கொதிக்க விட்டு சிறிது நேரத்தில் இறக்கவும். திராட்சை, ஜாதிக்காய்ப் பொடியை நெய்யில் பொரித்து கலவையுடன் சேர்க்க சுவையான பாயாசம் தயார்.