பேராசிரியர் ஹியூஜ் மூர்ஹெட் உலகத்தின் சிறந்த அறிவாளி களை தேர்வு செய்து ’வாழ்வின் அர்த்தம் என்ன?’ என்று கேட்டார். அவர்களின் கருத்தைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். அவர்கள் சொன்னது எல்லாமே வெறும் யூகம், தற்பெருமை கொண்டதாக இருந்தன. கடவுளின் விருப்பப்படி நம் வாழ்வு அமைகிறது என ஒருவரும் சொல்லவில்லை. மூர்ஹெட் வாழ்வைப் பற்றி எழுதும் போது ’படைப்பின் நோக்கம் இறைவனுக்கு மட்டுமே தெரியும். ஏனெனில் நாம் தாயின் கருவில் உருவாகும் முன்பே தேவனுடைய சிந்தையில் இருந்தோம் என்பது உறுதியான விஷயம்’ என்று சொல்லியிருந்தார். “நான் உனக்கு போதித்து நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” என்று இயேசு சொன்னது பைபிளில் இருக்கிறது. ஆம்... ஆண்டவரால் மட்டுமே நம்மை வழி நடத்த முடியும். ’நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களே வாழ்க்கை.. இதன் அர்த்தம் என்ன?’ என்று யாராவது உங்களிடம் கேட்டால், ’அது ஆண்டவனின் சித்தத்தைப் பொறுத்தது. அவர் எண்ணப்படியே எல்லாம் நடக்கும்’ என பதில் சொல்லுங்கள். அந்த பதில் ஆண்டவரின் மனதில் உங்களை நிலைக்க வைக்கும்.