பதிவு செய்த நாள்
22
ஆக
2018
01:08
திருப்பூர்: திருப்பூர், மங்கலம், கணபதிபாளையத்தில் உள்ள மாரியம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டுவரும் நிகழ்ச்சியுடன், இன்று (ஆக்., 22ல்) துவங்குகிறது.
நாளை (ஆக்., 23ல்) காலை, 6:30 மணி முதல், கணபதி ஹோமம், லட்சுமி குபேர யாகம், கோமாதா பூஜை, காலை, 9:00 மணிக்கு, முளைப்பாலிகை ஊர் வலம், மாலை, 4:30 மணிக்கு, யாக சாலை பிரவேசம் மற்றும் முதல்கால யாகபூஜை நடைபெறும்.
நாளை மறுநாள்,(ஆக்., 24ல்) காலை, 7:45 மணி முதல், இரண்டாம் காலம், வேள்வி; மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் காலம். 24ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. அன்று, காலை, 6:00மணிக்கு மங்கள விநாயகர், வேம்பரசு நாகராஜ கணபதி ஆதி விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி, காலை, 7:30 மணி முதல், அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழாவின் ஒருபகுதியாக, 24ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, ஊஞ்சப்பாளையம் குழுவினரின், காவடி ஆட்டம் நடைபெறும். 25ம் தேதி முதல், தொடர்ந்து 24 நாட்கள், மண்டல பூஜை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியார் மற்றும் பக்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.