பதிவு செய்த நாள்
25
ஆக
2018
02:08
முத்தியால்பேட்டை : முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன் கோவிலுக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் வந்தார். வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை கீழ் தெருவில், மூலஸ்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன் தினம் காலை, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்பதாக இருந்தது; ஆனால், வரவில்லை. அவருக்கு பதிலாக, ராஜ்யசபா, எம்.பி., மைத்ரேயன் பங்கேற்றிருந்தார். இருப்பினும், நேற்று முன் தினம் இரவு, 10:30 மணிக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மூலஸ்தம்மன் கோவிலுக்கு வந்தார். அவரை, ஆர்.வி.ரஞ்சித்குமார் வரவேற்றார். கோவிலில் வழிபட்ட பன்னீர்செல்வம், இரவு சிற்றுண்டிக்கு பிறகு, சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.