பதிவு செய்த நாள்
25
ஆக
2018
02:08
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், திரளான பெண்கள் வரலட்சுமி விரத பூஜை நடத்தி, சிறப்பு வழிபாடு நடத்தினர். பெண்கள் விரதம் இருந்து பூஜை நடத்தி வழிபாடு செய்வதில், முக்கியத்துவம் வாய்ந்ததாக, வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், செல்வம் சேரும், அம்பாள் அருளால் விரும்பியவை கிடைத்து, வாழ்வு வளமாகும் என்பது ஐதீகம். இதன்படி ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்னால் வரும், வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி பூஜை செய்யப்படுகிறது. நேற்றைய பூஜையில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெண்கள், வழிபாடு நடத்தினர். பின், பூஜையில் வைக்கப்பட்டிருந்த வளையல், மஞ்சள், குங்குமம், துணிகள் ஆகியவற்றை பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு வழங்கி, உணவு பரிமாறினர்.