பதிவு செய்த நாள்
25
ஆக
2018
02:08
கோவை;காமராஜ் நகர் சித்தி விநாயகர், ஜெயமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகரில் அமைந்துள்ளது, சித்தி விநாயகர், ஜெயமாரியம்மன் கோவில். கோவில் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. திருப்பணி நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 பகுதியில் உள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருந்து, முளைப்பாலிகை, தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, முதல் கால யாக வேள்வி நடந்தது. நேற்று அதிகாலை, முதல் பல்வேறு பூஜைகள் நடந்தன. காலை, 6:15 மணிக்கு கோபுர கலசங்களுக்கும், 6:30 மணிக்கு மூல மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது; சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.