பதிவு செய்த நாள்
25
ஆக
2018
02:08
திருப்பூர்: வரலட்சுமி விரதநாளான நேற்று, பெருமாள் கோவில்களில் உள்ள, மகாலட்சுமி தாயாருக்கு, சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடந்தது.ஆவணி அவிட்டத்துக்கு முன்பு வரும், வெள்ளிக்கிழமை நாளில், வரம் கொடுக்கும் லட்சுமிக்கு நோன்பிருந்து வழிபாடு நடத்தப்படுகிறது. சுமங்கலி பெண்கள், குடும்ப சுபிட்ஷம் வேண்டி, வரலட்சுமி நோன்பு விரதத்தை கடைபிடித்து, வழிபாடு நடத்துகின்றனர்.மகாலட்சுமி அவதரித்த தினமான, பங்குனி உத்திரம் மற்றும் வரலட்சுமி நோன்பு நாளில் மட்டும், கருவறையில் இருக்கும், லட்சுமி தாயாருக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அவ்வகையில், நேற்று, வீரராகவப் பெருமாள் கோவிலில், கனகவல்லி தாயாருக்கு, 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.அதன்பின், குங்குமம், கண்ணாடி வளையல், கண்ணாடி, சீப்பு, மஞ்சள் கயிறு, பூ வகைகள், தாயாரின் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து, பக்தர்களுக்கு, பிரசாதமாக வழங்கப்பட்டது.