நாமகிரி தாயார் கோவிலில் ஸ்ரீசுக்த பாராயணம் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2018 02:08
நாமக்கல்: உலக நன்மை வேண்டி, நாமக்கல் நாமகிரி தாயார் கோவிலில் ஸ்ரீ சுக்தம் பாராயணம், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் மேற்குப்பகுதியில் நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மர் திருக்கோவில் குடவறைக்கோவிலாக அமைந்துள்ளது. புராதன சிறப்புப் பெற்ற இக்கோவிலில், உலக நன்மை வேண்டியும், பக்தர்கள் குபேர அருள்பெற்று செல்வம் பெருகவும் வேத ஆகம முறைப்படி ஸ்ரீ சுக்தம் பாராயணம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவில் முன் மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளி பாராயணம் முடிந்ததும், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை, 6:00 மணிக்கு பாராயணம் நிகழ்ச்சி நடைபெறும். அதற்காக ஒரு குடும்பத்திற்கு, 250 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் செயல்படும் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என, கோவில் பட்டாச்சாரியார்கள் தெரிவித்தனர்.