பதிவு செய்த நாள்
27
ஆக
2018
12:08
சங்ககிரி: சங்ககிரி, புனித அந்தோணியார் ஆலயத்தில், அன்னை தெரசா பிறந்த நாள், புனித அந்தோணியார் பவனி, பவுர்ணமி ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது. திருச்செங்கோடு மறை வட்ட முதன்மை குரு ஜோசப் பால்ராஜ் தலைமையில், திருப்பலி பூஜையுடன் தொடங்கியது. விஜய் அமல்ராஜ் குணமளிக்கும் ஆராதனை வழிபாடு நடத்தினார். அன்னை தெரசாவின் வாழ்க்கை நிகழ்வுகள் குறித்து, கும்பகோணம் சூசை பேசினார். இதையடுத்து, அன்னை தெரசா மற்றும் புனித அந்தோணியாரின் பவனி சந்தைப்பேட்டை, புதிய இடைப்பாடி சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட், பழைய இடைப்பாடி சாலை வழியாக சென்று, ஆலயத்தை அடைந்தது. இதில், கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சங்ககிரி பங்கு தந்தை சகாயராஜ் செய்திருந்தார்.