பதிவு செய்த நாள்
28
ஆக
2018
04:08
மும்மூர்த்திகளின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர் வழிபாட்டுக்காக 1966ல் மைசூரில் ’அவதூத தத்தபீடம்’ அமைப்பை கணபதி சச்சிதானந்த சுவாமிகள் நிறுவினார். இதன் சார்பாக சென்னை வேளச்சேரி, தரமணி 100 அடி சாலையில் உள்ள பேபி நகரில், 1989ல் ஆதிகுரு தத்தாத்ரேயர் கோயில் கட்டப்பட்டது. பின் காரியசித்தி ஆஞ்சநேயர், ராஜராஜேஸ்வரி, நவக்கிரக சன்னதிகள் உருவாயின. 2015, 16ல் ஏற்பட்ட வெள்ளத்தால் கோயில் பழுதுபட்டது. சுவாமிகளின் விருப்பப்படி திருப்பணி செய்யப் பட்டு 2018 மார்ச்4ல் கும்பாபிஷேகம் நடந்தது.
அழகான மண்டபத்துடன் கூடிய கோயில் நுழைவு வாயிலில் கம்பீரமாக இருயானை சிலைகள் பக்தர்களை வரவேற்கின்றன. கருவறையில் ஆதிகுரு தத்தாத்ரேயர், அனகா தேவியுடன் அருள்பாலிக்கிறார். தட்சிணாமூர்த்தி, தன்வந்திரி, சர்வேஸ்வரன், விஸ்வேஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியருக்கு சன்னதிகள் உள்ளன. காரியசித்தி ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர், நாத ஆஞ்சநேயர், அபய ஆஞ்சநேயர் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன. சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு நேர்த்திக்கடனாக மட்டை தேங்காய் கட்டும் வழக்கம் உள்ளது. ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரியின் போது அலங்காரம் செய்யப்படும். தத்தாத்ரேயருக்கு மார்கழியில் தனுர்மாத பூஜையும், தத்தாத்ரேயர் ஜெயந்தி நடக்கும். விஸ்வேஸ்வரருக்கு மாதசிவராத்திரி, பிரதோஷ காலத்தில் அபிஷேகமும், முருகனுக்கு கார்த்திகை, விசாக நட்சத்திர நாட்களில் திருப்புகழ் பஜனையும் நடக்கிறது. அவதூத தத்தபீடத்தின் இளைய பீடாதிபதி விஜயானந்த தீர்த்த சுவாமிகள் 15வது சாதுர்மாஸ்ய விரதத்தை இந்தக் கோயிலில் மேற்கொண்டு வருகிறார். ஜூலை 27ல் தொடங்கிய விரதம் செப்.25ல் நிறைவு பெறுகிறது. இந்நாட்களில் காலை, மாலையில் சோடச லட்ச தத்த ஹோமம், சண்டி ஹோமம், சதகண்டி பாராயணம், ஸ்ரவுத யாகம் நடக்கின்றன. ஆக.30ல் நட்சத்திர தோஷ பரிகாரமாக நட்சத்திர சாந்தி யாகம், செப்.16 – 22 வரை மாலை 6:00 – இரவு 7:30 மணி வரை விஜயானந்த சுவாமிகளின் சொற்பொழிவு நிகழ்ச்சியும், உலக நன்மைக்காக சீனிவாசர்– பத்மாவதி, முருகன்– வள்ளி, தத்தாத்ரேயர்– அனகாதேவி
திருக்கல்யாண வைபவமும் நடக்கின்றன.
இளைய வயது; பெரிய மனசு
இளம் வயதில் வாரியாருக்கு அவரின் தந்தை மல்லையதாசர் வீணை ஒன்றை வாங்கிக் கொடுத்து, ஆனைகவுனி தென்மடம் வரதாச்சாரியாரிடம் பயிற்சிக்கு அனுப்பினார். தினமும் காலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வீணையைச் சுமந்தபடி குருநாதர் வீட்டுக்குச் செல்வார் வாரியார். குருநாதரைக் கண்ட முதல் நாள் அவரது காலில் விழுந்து வணங்கினார். பயிற்சி முடிந்ததும் மீண்டும் காலில் விழுந்தார். “ என்னை இரண்டு முறை சாஷ்டாங்கமாக வணங்குகிறாயே ஏன்?” எனக் கேட்டார் குருநாதர் “பெரியவர்களை எத்தனை முறை வணங்கினால் தான் என்ன... நன்மை தானே உண்டாகும்”என்று பெரிய மனதுடன் பதிலளித்தார். பயிற்சி பெற்ற காலத்தில் தினமும் இருமுறை வணங்க மறந்ததில்லை.