வாரியாரின் தந்தை மிக கண்டிப்பானவர். மூன்று வயதிலேயே குழந்தை வாரியாருக்கு எழுத்துப் பயிற்சி அளித்தார். பள்ளியில் சேர்க்காமல் இலக்கிய, இலக்கணங்களைத் தந்தையிடம் கற்றார். அதிகாலை 5:00 மணிக்கு பிடில் வாசிக்கும் இசைப் பயிற்சியுடன் தொடங்கும் வகுப்பு இரவு வரை தொடரும். காலை ஏழு மணிக்கு தமிழ் இலக்கணம், பகல் முழுவதும் தேவாரம், திருப்புகழ் பாட்டு வகுப்பு, மாலையில் அருளாளர்களின் வாழ்க்கை வரலாறு என்று பாடங்களை மல்லையதாசரே கைப்பிரதியாக எழுதிக் கொடுப்பார். பாடங்களை மனப்பாடம் செய்யும் வரை விட மாட்டார். ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் படித்ததால் பத்து வயதிலேயே வாரியார் 10 ஆயிரம் பாடல்களை மனப்பாடம் செய்தார். வாழ்வில் கிடைத்த பெரும் செல்வமாக இது அமைந்தது.