சிவகங்கை மாவட்டம், பிரான்மலை தலத்தில் உள்ளது மங்கைபாகர் கோயில். இங்குள்ள மங்கைபாகர் சிலை 32 மூலிகைகளின் சாறு கொண்டு உருவாக்கப்பட்டதால், அதற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. பவுர்ணமியன்று புனுகு, சாம்பிராணி, தைலம் சாத்துகின்றனர். முருகப்பெருமான் இங்கு இரண்டு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். இவை கொடுங்குன்றநாதர் சன்னதியில் சொக்கலிங்கம், ராமலிங்கம் என்ற பெயரில் உள்ளன. மத்தியில் முருகன் பாலரூபத்தில் காட்சி தருகிறார்.