கன்னியாகுமரி கடலோரத்தில் கன்னி தெய்வமாக பகவதியம்மன் அருள்புரிகிறாள். அன்னை அம்பிகை கன்னியாக பிறப்பெடுத்து இங்கு தவம் செய்தாள். வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் மூன்றும் சங்கமிக்கும் இங்கு ஆடி அமாவாசையன்று நீராடி தர்ப்பணம் செய்தால் மன பலம் அதிகரிக்கும்.