விழுப்புரம் ராகவேந்திர சுவாமிகளுக்கு 347வது ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2018 11:08
விழுப்புரம்: வளவனுார் அருகே குமாரகுப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் கோவிலில் 347 வது ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது. ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 347 வது ஆராதனை விழாவையொட்டி, நேற்று காலை 6.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 7.00 மணிக்கு விநாயகர், மாஞ்சாளி அம்மன், ஆஞ்சநேயர், ராகவேந்திர சுவாமிகளுக்கு கலச ேஹாமங்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 7.30க்கு மகா தீபாராதனை, 8.00 மணிக்கு லட்சார்ச்சனை, திருவிளக்கு பூஜை, 11.00 மணிக்கு சுவாமிகளுக்கு தங்கக்கவசம் சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. பின், இரவு 7.00 மணிக்கு சிறப்பு பஜனை மற்றும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை மந்த்ராலய பீடாதிபதி சுபுதீந்திர தீர்த்தர் சுவாமிகள் மற்றும் சென்னை குருஜி ஸ்ரீ ராகவேந்திராச்சார் ஆகியோர் செய்து வைத்தனர். விழா ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகி சங்கரலிங்கம் தலைமையில் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.