நெட்டப்பாக்கம்: கல்மண்டபம் முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபம் காலனியில் உள்ள விநாயகர், பாலமுருகன், அய்யனாரப்பன், முத்துமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று அய்யனாரப்பனுக்கு ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், இரவு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. 31ம் தேதி காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம், மதியம் 3:00 மணிக்கு செடல் உற்சவம், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. 1ம் தேதி காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.