காஞ்சிபுரம்: விழுதமங்கலம் உய்யாலம்மன் கோவிலில், கூழ் வார்த்தல் விழா விமரிசையாக நடந்தது. லத்துார் அடுத்த பவுஞ்சூர் ஊராட்சி, விழுதமங்கலம் கிராமத்தில் உய்யாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழாவையொட்டி கூழ் வார்த்தல் விழா நடைபெறும். அந்த வகையில், இந்தாண்டு விழா கடந்த, 28ல் நடந்தது. விழாவையொட்டி, காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பகல், 12:00 மணிக்கு கூழ் வார்த்தலை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வண்ண விளக்கு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வானவேடிக்கையுடன் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று இரவு, நாடகம் நடந்தது. விழாவில் விழுதமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.