பதிவு செய்த நாள்
30
ஆக
2018
12:08
சோமங்கலம்: எல்லையம்மன் கோவில் திருவிழாவில் நடந்த கூத்து நாடகத்தை, கிராம மக்கள் விடிய விடிய ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். கூத்து கலை மூலம், மஹாபாரத கதைகளை, மக்கள் எளிதாக புரிந்து கொள்கின்றனர். ஆடி மாத கோவில் திருவிழாக்களில் நடக்கும், கூத்து கலைக்கு பல கிராமங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த சோமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள, எல்லையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சமீபத்தில் கட்டைக்கூத்து நடந்தது. ‘சுபத்ரை கல்யாணம்’ என்ற நாடக கூத்தை, 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இரவு துவங்கி, அதிகாலை வரை பார்த்து ரசித்தனர்.