பதிவு செய்த நாள்
30
ஆக
2018
12:08
கிருஷ்ணகிரி: வரட்டபனப்பள்ளி அடுத்த, தேசுப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கரகங்கள் கூடும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், தேசுப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 21ல் அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து, கோவிலுக்கு வந்தனர். பின், அம்மனுக்கு அபி?ஷகம், அலங்காரம் நடந்தது.நேற்று காலை, இரண்டு பிரிவைச் சேர்ந்த கரகங்கள், தலை கூடும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, ஒரு பிரிவினர் சுவாமிக்கு அலங்காரம் செய்து, மூன்று கரகங்களை தலையில் சுமந்தபடி நகர் வலம் வந்தனர். இதேபோல், மற்றொரு பிரிவில், ஒரு கரகத்தை சுமந்தபடி நகர் வலம் வந்தனர். இந்த கரகங்கள் அனைத்தும், கோவில் அருகே சேர்ந்து, தலை கூடும் நிகழ்ச்சி நடந்தது