பதிவு செய்த நாள்
01
பிப்
2012
11:02
தர்மபுரி: அரூர் அடுத்த புõரண சிறப்பு பெற்ற தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் வரும் 5ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. ராமர் வழிப்பட்ட தலங்களில் இதுவும் ஒன்று என்ற சிறப்பு பெற்ற இக்கோவிலில் இன்று விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்குகிறது. ராமர் சிவபெருமானை வழிபட்ட இடங்கள் இரண்டு ஒன்று தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரம் மற்றொன்று புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்த தீர்த்தமலையாகும். தீர்த்தமலை அரூர் அருகேயுள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு வரலாற்று, புராண சிறப்புகள் உண்டு. திருமுறை கண்ட ராஜராஜ சோழன் மகனாகிய ராஜேந்திர சோழன் இக்கோவில் முன் மண்டபத்தை புதுப்பித்து நிவந்தங்கள் அளித்த தகவல்கள் இக்கோவில் கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகிறது. சோழ மன்னர்கள், கங்கர்கள், சாளுக்கியர், நாயக்கர் காலங்களை சேர்ந்த 18 கல்வெட்டுக்கள் இக்கோவில் இருப்பதை கொண்டு இக்கோவிலின் வரலாற்று சிறப்புகளை நாம் அறிய முடியும். அருணகிரி நாத சுவாமிகளால் திருப்புகழ் அருளிய ஒரே திருத்தலம் என்ற பெருமையும் இக்கோவிலுக்கு உண்டு. தீர்த்தமலையில் 11 தீர்த்தங்கள் உள்ளன. ஒவ்வொரு தீர்த்தங்களுக்கும் ஒரு வரலாற்று சிறப்பை பெற்றுள்ளது. இங்குள்ள ராம தீர்த்தம் ராமபிரான் வன வாசத்தில் இருந்த போது, சீதை சிறை பிடிக்கப்பட்டார். சீதையை மீட்கும் போது ராவணன் கொல்லப்பட்டார். அப்போது ராமருக்கு பிரமத்திய தோசம் பற்றி கொள்கிறது. தோசம் நீங்க தீர்த்தமலையில் உள்ள சிவனை வணங்கிட வேண்டும் என முனிவர்கள் கூறியதால் இங்கு ராமர் வந்தார். நீராடி தவம் புரிய இந்த மலையில் தண்ணீர் இல்லை. அனுமனை அனுப்பி தண்ணீர் கொண்டு வர ராமர் உத்தரவிட்டார். அனுமன் தண்ணீர் கொண்டு வர காலதாமம் ஏற்பட்டது. அப்போது, சீதா தேவி பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து இறைவனை வேண்டினார். உடனே மலையின் அனைத்து பகுதியில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து கலசங்கள் நிரம்பியது. அதை வைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ராமர் வழிபட்டார். இதனால், இந்த தீர்த்தம் ராமர் தீர்த்தம் என வரலாறு கூறுகிறது. தீர்த்தமலையில் சிவலிங்கத்தை ஒரு திசையில் இருந்து பார்க்கும் பாது படுத்திருக்கும் நந்தியை போலவும், மற்றொரு திசையில் இருந்து பார்க்கும் போது ஜடாமுடிகளுடன் கூடிய சிவபெருமானின் சிரம் போலவும் தோற்றமளிக்கும். புராண சிறப்பு மிக்க இக்கோவிலில் திருப்பணிகள் ஹிந்து அறநிலையத்துறை கந்தாசமி மற்றும் திருப்பணிக்குழுவினரின் முயற்சியால் பணிகள் முடிக்கப்பட்டு வரும் 5ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை 4 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, மஹா தீபாராதனை நடக்கிறது. நாளை காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மாலையில் வாஸ்து சாந்தி, ப்ரேவச பலி, ர÷ஷாக்னம், தீர்த்த சங்கிரஹனம், அங்குரார் பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காõரம், முதல் கால யாக பூஜை நடக்கிறது. வரும் 4ம் தேதி காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மூன்றாம் கால யாக வேள்வி பூஜைகள் நடக்கிறது. 5ம் தேதி அதிகாலை 3 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நான்காம் காலயாக வேள்வி பூஜைகள், காலை 5.30 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை, காலை 7.45 மணிக்கு கலங்சங்கள் புறப்பாடு, 8 மணிக்கு மூலர் அம்மாள் விமான குடமுழுக்கு, 8.30 மணிக்கு பரிவார மூர்த்திகள் குட குழுக்கு, தீபாராதனை, மஹா அபிஷேகம் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு வடிவாம்பிகை சமேதர தீர்த்தகிரீஸ்வருரக்கு திருகல்யாணம் நடக்கிறது. யாகசாலை வேள்விகளை திருபரங்குன்றம் கந்தகுரு வித்யாலயம் வேதசிவாகம பாடசாலை ராஜா பட்டர் மற்றும் கோவில் அர்ச்சகர் நடத்துகின்ஞூறனர். கும்பாபிஷேக விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், கலெக்டர் லில்லி, செயல் அலுவலர் திருஞானசம்பந்தர், உதவி ஆணையர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், கோவில் தேர் திருவிழா நிரந்தர கட்டளைதாரர்கள் மற்றும் தீர்த்தமலை பக்தர்கள் செய்து வருகின்றனர்.