பதிவு செய்த நாள்
31
ஆக
2018
12:08
உத்திரமேரூர்: எஸ்.மாம்பாக்கத்தில் நேற்று, ஒரே நாளில் ஆறு கோவில்களில் மஹா கும்பாபிஷேகம் நடை பெற்றறது. உத்திரமேரூர் ஒன்றியம், சிறுபினாயூர் ஊராட்சிக்கு உட்பட்டது, எஸ்.மாம்பாக்கம். இக்கிராமத்தில் செல்வ வினாயகர், முருகர், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள், கெங்கையம்மன், செல்லியம்மன், மாரியம்மன் என ஆறு கோவில்கள் உள்ளன. இக்கோவில்களின் கட்டடபகுதி, கோவில் கட்டடத்தின் மேற்தளம் மற்றும் சுவாமிகளின் கருவறை உள்ளிட்ட பலபகுதிகள், 20லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டன. நேற்று காலை , 8:00 மணிக்கு துவங்கி, ஒன்றன் பின் ஒன்றாக மூன்று கோவில்களிலும் மஹாகும்பாபிஷேக விழா நடை பெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.