திருப்பூர் கோவில்களில் மஹா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2018 12:08
திருப்பூர்: மஹா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோவில்களில், நேற்று, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஆவணி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரும் சங்கடஹர சதுர்த்தி, மஹா சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. அவ்வகையில், நேற்று மஹா சங்கடஹர சதுர்த்தி. திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார விநாயகர் கோவில்களில், சிறப்பு ேஹாமம் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடந்தன. விநாயக பெருமானுக்கு, சிறப்பு விசேஷ அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் கூறுகையில், ‘சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மேற்கொண்டால் வாழ்வின் அனைத்து துன்பங்களும் நீங்கும். சவுபாக்கிய வாழ்வு கிட்டும். வாழ்வில் ஏற்படும் தொல்லை, சங்கடஹரசதுர்த்தி வழிபாட்டினால், சீராகும்,’ என்றனர்.