பதிவு செய்த நாள்
01
செப்
2018
12:09
சென்னை : வேளச்சேரியில் அமைந்துள்ள, ஆதி குரு தத்த தலத்தில், ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம், இன்று விமரிசையாக நடக்க உள்ளது. சென்னை, வேளச்சேரியில் அமைந்துள்ளது, கணபதி சச்சிதானந்த ஆசிரமம். அங்கு, தத்த விஜயானந்த தீர்த்த சுவாமிகள், 15வது சாதுர்மாஸ்ய விரதத்தை, ஜூலை, 27ல் துவக்கினார். இந்த விரதம், செப்., 25ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில், உலக நலனுக்காக, வேளச்சேரி, ஆதி குரு தத்த ஷேத்திரத்தில், ஸ்ரீனிவாச திருக்கல்யாணம், இன்று விமரிசையாக நடக்க உள்ளது. மேலும், செப்., 2ம் தேதி, 100 வேத விற்பன்னர்கள் நடத்தும், சத சண்டி பாராயணமும், சண்டி ஹோமமும் நடக்க உள்ளது. செப்., 3ம் தேதி, ஏகாதச ருத்ராபிஷேகம் நடக்க உள்ளது. அதனுடன், மக்களின் தேக ஆரோக்கியத்திற்கு, மகா மிருத்யுஞ்சய ஹோமம் நடத்தப்படுகிறது.
இந்த ஹோமத்தில் பங்கேற்றால், அதிக பலன் கிடைக்கும். மிருத்திய பயத்தையும் போக்கும். செப்., 7ம் தேதி தேக சக்தியும், தன தான்யங்களும் வழங்கும், மகாலட்சுமி யாகம் நடக்க உள்ளது. செப்., 8ம் தேதி, வேளச்சேரி, கணபதி சச்சிதானந்தா ஆசிரம வளாகத்தில் உள்ள சுப்பிரமண்யருக்கு, நாகப் பிரதிஷ்டை நடக்க உள்ளது. சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், நாகப் பிரதிஷ்டை காண்பதும், நாக பூஜை செய்வதும், தோஷ பரிகாரமாகும். அனைத்து பக்தர்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பலனடைய வேண்டும் என, ஆசிர நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், விபரங்களுக்கு, 96000 03651, 98840 27739 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.