பதிவு செய்த நாள்
01
செப்
2018
12:09
ராசிபுரம்: கொழிஞ்சிப்பட்டி, பண்ணையம்மன் கோவில் கும்பாபிஷேம், கோலாகலமாக நடந்தது. ராசிபுரம் அடுத்த ஏழூர் நாடு, கொழிஞ்சிப்பட்டியில் பண்ணையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, யாக சாலை பூஜைகள் கடந்த, 26ல் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. மறுநாள் கிராமசாந்தி பூஜை, 28ல் கணபதி, நவக்கிரஹ ?ஹாமம் நடந்தது. தொடர்ந்து, காவிரியில் இருந்து புனித தீர்த்தம், முளைப்பாரி ஆகியவற்றை, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் எடுத்து வந்தனர். 29 காலை, 6:00 மணிக்கு மங்கள இசை, வேதபாராயணம், ருத்ர பாராயணம், பாவன அபிஷேகம், அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடந்தது. கடந்த, 30ல் இரண்டாம், மூன்றாம் கால யாக வேள்வி நடைபெற்றது. நேற்று காலை, 3:00 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி தொடங்கிறது. 6:00 மணியில் இருந்து, 7:15 மணிக்குள் யாகத்தில் இருந்த புனிதநீரை கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.