விநாயகர் சிலைகள் தயாரிப்பு : மாசுகட்டுப்பாட்டுத்துறை எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2018 12:09
திருமங்கலம்: தடைசெய்யப்பட்ட பொருட்களில் விநாயகர் சிலைகளை செய்தாலோ, விற்றாலோ பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் எச்சரித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை பூச வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பேரீஸ் மற்றும் வேதியியல் முறையில் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை பயன்படுத்தக்கூடாது. தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு சிலை தயாரிக்கும் மற்றும் விற்கும் இடங்களில் ஆய்வு செய்து வருகிறது. விதிகளை மீறிய சிலைகள் தயாரிக்கப்பட்டிருந்தால் பறிமுதல் செய்து விடுவோம் என்றனர்.
திருப்பரங்குன்றம்: இதற்கிடையே விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் போலீஸ் உதவி கமிஷனர் பீர்முகமது தலைமையில் நடந்தது. பா.ஜ., இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா, இந்து முன்னணி நிர்வாகிகள் கொண்டனர். 40 நிபந்தனைகளுடன் ஊர்வலம் நடத்தவும், புதிய சிலைகள் பிரதிஷ்டைக்கு அனுமதி கோரினால் பரிசீலிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.