பதிவு செய்த நாள்
01
செப்
2018
12:09
சேலம்: சேலம், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: இஸ்கான், சேலம் கிளை சார்பில், கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா, சேலம், சோனா கல்லூரி மைதானத்தில், நாளை நடக்கவுள்ளது. காலை, 8:00 மணிக்கு தொடங்கும் விழாவில், பஜனை, உபன்யாசம், இஸ்கான், திரைப்படம், சென்னை பிரபுபாதர் தியேட்டர்ஸ் குழுவினரால், கிருஷ்ண லீலா நாடகம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. மேலும், கிருஷ்ண பலராமரின் விக்கிரகங்களுக்கு, சிறப்பு அலங்காரம் செய்து, ஆரத்தி, கீர்த்தனம் நடக்கவுள்ளது. இரவு, 10:30 மணிக்கு, அபிஷேகம், ஆரத்தி நடைபெறும். பக்தர்களுக்கு, பிரசாத விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில், ஆன்மிக புத்தக நிலையங்கள், பிரசாத கவுன்டர்கள், கோவில் கட்டுமான பணி ஸ்டால், கேள்வி பதிலுக்கான பந்தல் முதலியவை இடம்பெறும். மக்கள், கிருஷ்ணரின் கருணையை பெற, ஏற்பாடுகளை, இஸ்கான் கோவில் நிர்வாகம் செய்துள்ளது. மேலும், கருப்பூர் ஹரே கிருஷ்ணா கோவிலில், திருப்பணி நடப்பதால், நாளை, தரிசனம், நிகழ்ச்சி எதுவும் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.