செஞ்சி : செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் வரதராஜ பெருமாள், ருத்ர அனுமன் சன்னதியில் நவகலச அபிஷேகம் நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் புதிதாக வரதராஜ பெருமாள், ருத்ர அனுமன் சன்னதிகள் அமைத்துள்ளனர். இதற்கு நேற்று முன்தினம் அஷ்டபந்தன நவகலச அபிஷேகம் செய்தனர். இதை முன்னிட்டு கடந்த 28ம் தேதி மாலை 7 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகளும், இரவு 10 மணிக்கு பூர்ணாஹுதியும் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 8.30 மணிக்கு கடம் புறப்பாடும், 8.50 மணிக்கு அஷ்டபந்தன நவகலச அபிஷேகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.