மஞ்சூர் : பெம்பட்டி, தாம்பட்டி கிராமங்களில் ஹெத்தையம்மன் விழா சிறப்பாக நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகரின கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக ஹெத்தையம்மன் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் இறுதி விழாவாக நேற்று முன்தினம் பெம்பட்டி, தாம்பட்டி கிராமங்களில் நடந்தது. காலையில் ஹெத்தையம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 25 பைசா காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில், திரளானோர் பாரம்பரிய உடையணிந்து நீண்ட வரிசையில் நின்று காணிக்கை செலுத்தினர். அன்னதான நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி பல்வேறு கிராமங்களிலிருந்து படுகரின மக்கள் பங்கேற்றனர்.