மானாமதுரை: மானாமதுரையில் கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் தர்ம பிரஸார் சமிதிசார்பில் கிருஷ்ணஜெயந்தி ரத ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் துவங்கிஅண்ணாத்துரை சிலை, தேவர் சிலை, பட்டரைத்தெரு,பிருந்தாவனம் ஆகிய பகுதிகளின்வழியே சென்று அழகர் கோயிலை அடைந்தது.அங்கு சிறப்பு அபிேஷகங்கள்,ஆராதனை நடைபெற்றன. நிர்வாகிகள் ராஜசேகரன், சீனிவாசன்,சாந்தி,ஜெயக்கொடி, மாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.