பதிவு செய்த நாள்
05
செப்
2018
01:09
மேல்மருவத்தூர்:ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளாரின், 50வது திருமண நாள் விழாவில், 504 பேருக்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட, பங்காரு அடிகளாரின், 50வது திருமண நாளையொட்டி, நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, கருவறை ஆதிபராசக்தி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது.
சித்தர் பீடத்திற்கு வந்த அடிகளாருக்கு, பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து. பங்காரு அடிகளார், அவரது மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் இணைந்து, 25 லட்சம் ரூபாய் மதிப் பிலான நலத்திட்ட உதவிகளை, பக்தர்களுக்கு வழங்கினர்.இதில், 50 பேருக்கு, 20 ஆயிரம் ரூபாய் திருமண உதவித்தொகை; 75 தையல் இயந்திரம், 25 இஸ்திரிபெட்டிகள் உட்பட, 504 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.