நித்யகல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் யோக நரசிம்மர் கண் விழிக்கும் வைபவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2025 04:12
சின்னசேலம்: சின்னசேலம் நித்யகல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் யோக நரசிம்மர் கண் விழிக்கும் திருநாள் நடந்தது. சின்னசேலம் பெருந்தேவி தயார் சமேத நித்யகல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், ஆதிசேஷ ஆசனத்தில் யோக நிலையில் அருள் பாளிக்கும் யோக நரசிம்மர் கண் விழிக்கும் வைபவம் நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு யோக நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி, காலை 10:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.