காஞ்சிபுரம் சங்கரடமடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரது அனுக்கிரகத்துடன், மஹா சுவாமிகளின், 32வது ஆராதனை மகோத்சவம், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நாளை நடைபெறுகிறது. மகோத்சவத்தை முன்னிட்டு நேற்று காலை வேதபாராயணம், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், ஸங்கீதாஞ்சலி உள்ளிட்டவை நடந்தது. வார்ஷிக ஆராதனை மகோத்சவம் நாளை, காலை 7:00 மணிக்கு ருத்ர பாராயணம், பூஜை, ஹோமங்கள், மதியம் 1:00 மணிக்கு மஹா சுவாமிகளின் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிேஷகமும் நடக்கிறது. மஹோத்ஸவத்திற்கான ஏற்பாட்டை சங்கரமடத்தின் ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்த்ரி, மேலாளர் சுந்தரேச ஐயர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர்.